Thursday, August 10, 2017

தோழர்களே நண்பர்களே....தோழர் வளவன் எழுதும் ... 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் உட்புறம்
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருட நிறைவுதினம்....(பாகம் 9)
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 13 பேர், பலர் அமர்ந்துள்ளனர்
நியாயப்படுத்தப்படும் மனிதஉரிமை மீறல்கள்
இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பிக்கப்பட்;;ட 1987ம் ஆண்டு ஒக்டோபர் 10ம் திகதிக்கு பின்னர், மனிதஉரிமை மீறல்கள் என்பது பரவலாக வடக்கு கிழக்கு எங்கும் சம்மந்தப்பட்ட எல்லாத் தரப்பினராலும் நடாத்தப்பட்டது. இத் தொடரில் முன்னர் குறிப்பிடப்பட்டது போல் இந்திய அமைதிப்படையை ஒன்றும் செய்யாது என்று நம்பி, ஊரடங்;கு சட்டம் அமூல்படுத்தப்பட்டிருந்த வேளையில் தெருவில் நடாமாடிய அனைவரும் இந்திய அமைதிப்படையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினார்கள். யாழ்பாண பல்கலைக்கழக வளாக மைதானத்தில் விமானம் மூலம் குதித்த இந்திய அமைதிப்படையின் பராசூட் அணியினர், மிகதுல்லியமாக விடுதலைப்புலிகளினால் குறிபார்கப்பட்டு சுடப்பட்டனர். இதற்கான எதிர்விளைவினை இந்திய இராணுவம் ( இனி இதனை அமைதிப்படை என அழைப்பதை விட இந்திய இராணுவம் என அழைப்பதே சரியானதாகும்.) காட்டத் தொடங்கியது. தமிழ்மக்கள் வரைமுறையின்றி வடக்கு கிழக்கு எங்கும் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகள் யார் சாதாரன பொதுமக்கள் யார், மற்றைய இயக்கங்கள் யார் என்பதை வேறுபடுத்தி அடையாளங் கண்டு கொள்ள முடியாத இந்திய இராணுவம், அனைவரையும் விடுதலைப்புலிகள் என்ற கண்ணோட்டத்துடனேயே பார்த்தது. ஒப்பந்தத்தை அடுத்து வடக்குகிழக்கு மாகாணம் எங்கும் அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்த மற்றை இயக்க போராளிகள், யுத்தம் ஆரம்பமாகியதும் இந்திய இராணுவ முகாம்களில் பாதுகாப்பு கோரி சரணடைந்தனர். ஆனால் சரணடைந்த அவர்களை இந்திய இராணுவம் சந்தேகப்பட்டதுடன், அவர்களை மிகவும் கேவலமாக நடத்தி கொடுரமாகவும் தாக்கியது. பின்னர் இயக்கத் தலைவர்கள் தமது உறுப்பினர்களை அடையாளப்படுத்திய பின்னரே சரணடைந்தவர்களுக்கு ஓரளவு கவனிப்பு கிடைத்தது.

விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின்போது இந்திய இராணுவம் நடாத்திய குறிப்பிடும்படியான அப்பட்டமான படுகொலைகளை பட்டியல் இடும்போது, யாழ்குடாநாட்டில் யாழ்பாண வைத்திய சாலையில் மருத்துவர்கள், தாதிகள், நோயாளிகள் பலரை படுகொலை செய்தமை, வல்வெட்டித்துறையில் ஓர் நூலகத்தில் பலரை படுகொலை செய்தமை போன்றவற்றை முக்கியமாக குறிப்பிடலாம், இதே போல மட்டக்களப்பில், விடுதலைப்புலிகளின் கிளைமோர் தாக்குதலை தொடர்ந்து களுவாஞ்சிக்குடி நகரில் உள்ள அனைத்து கடைகளும் இந்திய இராணுவத்தால் எரிக்கப்பட்டதையும் குறிப்பிடலாம். இந்திய இராணுவத்துக்கு எதிரான விடுதலைப்புலிகளின் யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர், பலகோடி ரூபா பெறுமதி மிக்க சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

இந்திய இராணுவத்தின் மனிதஉரிமை மீறல்கள் ஒருபுறம் இருக்க விடுதலைப்புலிகளாலும் இக்காலகட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்திய இராணுவத்துக்கு தண்ணீர் கொடுத்தவர்கள், மொழிபெயர்பாளர்களாக கடமையாற்றியவர்கள், சிவில் நிர்வாகத்தை சீரமைப்பதற்கு இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் போன்றோர், தம்மைப்பற்றி இந்திய இராணுவத்துக்கு உளவு சொன்னார்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர் EPRLF, TELO, PLOT, ENDLF, போன்ற இயக்கங்களின் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், அலவலகங்களுக்கு வந்து சென்ற ஆதரவாளர்கள் என பலரும் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர்.;EPRLF பாராளுமன்ற உறுப்பினர் யோகசங்கரியின் உறவினர், காசிநாதன் உறவின் நிமித்தம் யோகசங்கரியை சந்தித்து விட்டுப் போன பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் ஒட்டுமொத்தமாக இந்திய இராணுவத்தினாலும், விடுதலைப்புலிகளாலும், மற்றைய இயக்கத்தினராலும் நடாத்தப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் முகமாக “முறிந்த பனை” (“The Broken Palmyra”) என்ற புத்தகத்தினை எழுதிக்கொண்டிருந்த, மனித உரிமைகளுக்கான யாழ்.பல்கழைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (UTHR) நிறுவனர்களில் ஒருவரான, மருத்துவபீட பேராசிரியர் “ரஜனி திரணகம” படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையினை விடுதலைப்புலிகளே செய்தார்கள் என இன்று வரை (UTHR) குற்றஞ்சாட்டி வருகின்றது. மேலும் விடுதலைப்புலிகளுக்கும் பிரேமதாசா அரசுக்கும் பேச்சுவார்தை ஆரம்பமாகிய பின்னர் கொழும்பில் வைத்து தமிழர்விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டனர், பரவலாக பல கொலைகளையும் மனிதஉரிமை மீறல்களையும் விடுதலைப்புலிகள் செய்திருந்தாலும் மேற்குறிப்பிடப்பட்டவை குறிப்பி;ட்டுச் சொல்லும்படியான சம்பவங்களாகும்.

இதேபோல இக்காலகட்டத்தில் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்ட EPRLF, TELO, PLOT, ENDLF இயக்க உறுப்பினர்களும் பல கொலைகளிலும் மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டனர். விடுதலைப்புலிகளுக்கு உதவியவர்கள், ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப்புலி உறுப்பினர்களின் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமது இயக்க உறுப்பினர்களின், ஏதும் அறியா அப்பாவி உறவினர்கள் விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்விளைவாகவே இவர்களை தாம் கொலை செய்ததாக அதற்கு ஒரு நியாயத்தையும் அவர்கள் கூறிக்கொண்டார்கள். விடுதலைப்புலிகள் என சிறிதளவேனும் சந்தேகம் கொண்டால் அவர்கள் எவ்வித விசாரணையும் இன்றி போட்டுத் தள்ளப்பட்டனர். யாழ்பாணத்தில் வல்வெட்டித்துறையில் சிவஞானசுந்தரம் (இவர் வடகிழக்கு மாகாண அரசின் இடைக்கால நிர்வாகத்துக்கு முதலமைச்சராக விடுதலைப்புலிகளால் பரிந்துரைக்கப்ப்ட மூவரில் ஒருவர்), ஆசிரியர் கிருஸ்ணானந்தன், திருகோணமலையில் பல்மருத்துவர் ஞானி, முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தின் மகன் அகிலன் ஆகியோர் EPRLF ஆயுதப் போராளிகளால் கொல்லப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.EPRLF அமைப்பின் தலைமைக்குத் தெரியாமல் பல கொலைகள் அடிநிலை உறுப்பினர்களால் செய்யப்பட்டது. பல கொலைகள் செய்யப்பட்ட பின்னர், நியாயம் கற்பித்தலுடன் EPRLF தலைமைக்கு தெரிவிக்கப்பட்டது. அடிநிலை உறுப்பினர்களின் இவ் அடாவடித்தனங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே தலைமை காணப்பட்டது. அதிலும் குறிப்பாக யாழ். குடாநாட்டில், மருதனாமடம் உடுவில், வல்வெட்டித்துறை, தொண்டமானாறு பிரதேசங்களில் இவர்களது அடாவடித்தனங்களும், அத்துமீறல்களும் சொல்லி மாளாதவையாக இருந்தன. கீழ்மட்டத்தில் இவர்களின் அத்துமீறல்களை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தலைமை கடுமையான முயற்சிகள் எடுத்த போதும், அவற்றை அமூல்படுத்துவதற்கு, தமக்கு போதிய கால அவகாசம் இருக்கவில்லை என்று EPRLF தலைமைக்குழு உறுப்பினர்கள் பின்னர் கவலை தெரிவித்தனர். வடகிழக்கு மாகாண அரசினை தலைமை தாங்கியதன் காரணத்தினால்TELO, ENDLF உறுப்பினர்களால் நடாத்தப்பட்ட படுகொலைகளுக்கும் EPRLF அமைப்பின் மீதே பழிபோடப்பட்டது. முன்பு புலிகளால் தமது சமூகவிரோத செயல்களுக்கா பச்சை மட்டை அடி தண்டனைக்குட்படுத்தப்பட்ட சமூகவிரோதிகள் சந்தர்பம் கிடைத்த போது புலிகளை பழீவாங்க இந்திய இராணுவத்துடன் இணைந்து தமக்கு தண்டனை வழங்கிய புலி உறுப்பினர்களை படுகொலை செய்தனர். அவர்கள் செய்த கொலைகளும் EPRLF மீதே சுமத்தப்பட்டது. புலிகளுக்கு எதிரான இந்த இராணுவ நடவடிக்கையில் யாழ்பாணத்தில் ஈடுபட்ட ஓர் EPRLF உறுப்பினர் தனது நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்து பின்வருமாறு ஓர் தனிப்பட்ட உரையாடலின் போது தெரிவிக்கின்றார்.

“1986ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் திகதி EPRLF அமைப்பு விடுதலைப்புலிகளால் தடை செய்யப்பட்டதை அடுத்து, தான் கைது செய்யபட்டு பின் விடுதலை செய்யப்பட்டதாகவும், ஆனால் தினமும் காலையும் மாலையும் விடுதலைப்புலிகளின் குறிப்பிட்ட முகாமுக்குச் சென்று கையெழுத்திட வேண்டியிருந்ததாகவும், அப்படி சென்று கையெழுத்திட்ட பின்னர், முகாம் வாசலில் காவலுக்கு நிற்கும் விடுதலைப்புலி உறுப்பினருக்கு முன்னால் தனது தலையை சற்று பதிக்க, அவர் தனது தலையில் இருந்து ஒரு கொத்து மயிரை கையால் பிடுங்குவார் என்றும், இது தினமும் காலையும் மாலையும் நடக்கும் என்றும், இப்படி ஆறு மாதங்களாக தான் துன்பப்பட்டதாகவும், அதற்கு பழிவாங்கவே தமக்கு சந்தர்பம் கிடைத்தபோது தாமும் அவ்வாறு செயற்பட்டதாக, தனது செயலுக்கு நியாயம் கற்பித்துக் கூறிக்கொண்டார். இவ்வாறு ஒவ்வொரு தரப்பினரும் தத்தமது மனிதஉரிமை மீறல்களுக்கும், படுகொலைகளுக்கும் நியாயம் கற்பித்துக் கொண்டனர். 1989ம் ஆண்டின் மத்திய காலப்பகுதியில் கட்டாய ஆட்சேர்பு நடவடிக்கையிலும் மகாண அரசை பிரநித்துவப்படுத்திய இயக்கங்கள் மூன்றும் ஈடுபட்டமையும் ஓர் மாபெரும் மனிதஉரிமை மீறல் நடவடிக்கையாகும். பின்னர் இக்கட்டாய ஆட்சேர்பு நடவடிக்கைக்கு பொதுமக்களிடம் EPRLF அமைப்பு பகீரங்க மன்னிப்பு கேட்டுகொண்டது. (தனது தவறுக்கு பொதுமக்களிடம் பகீரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்ட ஒரே ஒரு இயக்கம் EPRLF என்பது குறிப்பிடத்தக்கதாகும்- இது பற்றி சரிநிகர் பத்திரிகையி;ல் சிலாகித்தும் எழுதப்பட்டது) ஆனால், இப்படியான மனித உரிமை நடவடிக்கையில் EPRLF அமைப்பினர் ஈடுபட்டார்கள் என்பது மறுக்கமுடியாத ஓர் வரலாற்றுப் பதிவு ஆகும்.

கடந்த தொடரில், வடக்கு கிழக்கு மாகாணஅரசு உருவாக்கப்ட்டதன் மூலம் தமிழ்மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை பெறுவதற்கான அடித்தளம் இடப்பட்டமை தொடர்பாகவும், அதன் வளர்சிபற்றியும் பார்த்தோம். ஆனால் இவ் அரசியல் விளைவுகளை, தமிழ்மக்களுக்கு சாதகமான நல்லகாரியங்களை முன்னெடுப்பதற்கு பல விலைகளை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் EPRLF க்கு ஏற்பட்டது என்பது மிக முக்கியமான விடயமாகும். அதுவும் தனது அடிப்படை கொள்கைகளில் ஒன்றான ஜனநாயகம் மனிதஉரிமைகள் போன்ற விடயத்தில், தான் அதுவரை கடைப்பிடித்து வந்த விழுமியங்களை EPRLF விலையாக கொடுத்தே இதனை சாதிக்க கூடியதாக இருந்திருக்கின்றது. மற்றைய எல்லா தமிழ்ஆயுத இயக்கங்களிலும் உள்முரன்பாடுகள் காரணமாக, அவ் இயக்க உறுப்பினர்களே படுகொலை செய்யப்பட்ட நிலையில் EPRLF இயக்கத்தில் மட்டுமே இருமுறை பிளவுகள் ஏற்பட்டபோதும் உள்ளியக்க முரண்பாடு காரணமாக எவ்வித படுகொலைகளும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு ஓர் ஆயுத அமைப்பாக இருந்த போதும், அரசியல் கட்சியாக இருந்த போதும் பேணிய இவ் ஜனநாயக, மனிதஉரிமைகள் தொடர்பான விழுமியங்களை, வடகிழக்கு மாகாண அரசு என்ற உருவாக்கத்தின் போது அவர்கள் கடைப்பிடிக்கமுடியாது போனமைக்கான காரணங்கள், நிர்பந்தங்கள் என்ன என்பது இராணுவ, சமூக, அரசியல், தளங்களி;ன் அடிப்படையில் இருந்து ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும் ஆனாலும் அவ் அடிப்படை மனிதஉரிமை மீறல்களை, ஜனநாயக மறுப்புக்களை எவ்விதத்திலும் எதற்காகவும் எவரும் நியாயப்படுத்தி விடமுடியாது. மொத்தத்தில் அமைதியை உருவாக்க வந்த இந்திய அமைதிபடை இலங்கையில் இருந்த இரண்டரை வருடகாலத்தில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் மனிதஉரிமைகளை மீறியே செயற்பட்னர். தத்தமது மனித உரிமைக மீறல்களைப் பற்றி அப்போதும் சரி, இப்போதும் சரி எவரும் அக்கறை செலுத்துவதில்லை என்பதே ஈழப்போராட்டத்தின் துயரம். 

உலகெங்கும் நடைபெற்ற கடந்த கால, சமகால தேச விடுதலை போராட்டங்கள், உரிமை போராட்டங்களை எடுத்துப் பார்கின்றபோது, மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்திய தேசவிடுதலைப் போராட்டத்தை தவிர, அனைத்து போராட்டங்களிலும், உரிமைகளுக்காக போராடும் தரப்பினரால், மனிதஉரிமைகள் மீறப்பட்டுள்ளதையும், தொடர்ந்து மீறப்பட்டுக் கொண்டு வருகின்றதையும் அவதானிக்க முடிகின்றது. மகாத்மாகாந்தியின் அகிம்சை போராட்டத்தின் முக்கிய வியாக்கியானங்களில் இருந்து, தத்துவார்த்த அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டு, ஆன்மீகம் சார்ந்த சத்தியாகிரக போராட்டத்தின் கோட்பாடுகளையும், உத்திகளையும் சர்வதேச சமூகம் கற்றுக் கொள்வதன் மூலமே இன்று நிலவும் உலக பதற்றத்தை, பிராந்தியங்களில் உருவாகியுள்ள அரசியல், இன, சமூக, கலாச்சார மோதல்களையும் தணிக்க முடியும் என்பது எனது ஆழமான நம்பிக்கையாகும்.

தொடரும்.........

தோழர்களே நண்பர்களே....தோழர் வளவன் எழுதும் ... 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் உட்புறம்
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருட நிறைவுதினம்....(பாகம் 8)
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 13 பேர், பலர் அமர்ந்துள்ளனர்
அதேசமயம், தமிழ்மக்களின் நீண்டகால கனவாகிய திருகோணமலையை தமிழர்களின் தலைநகரமாக்குதல் என்ற கனவு நனவாகத் தொடங்கியது. திருகோணமலை நகரபை கட்டிடம் தற்காலிக மகாணசபைகட்டிடமாகவும், மகாகாணஅரசின் தலைமைக் காரியாலயமாகவும் செயற்படத் தொடங்கியது. திருகோணமலை நகரின் பலபாகங்களில் மாகாணஅரசு அமைச்சுக்களின் அலுவலகங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட இடக்களில் உருவாக்கப்பட்டன. மாகாண சபைக்கான கொடி பல தமிழ் அறிஞர்களின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு மாகாண சபையின் அங்கீகாரம் பெறப்பட்டது. மாகாணசபைக்கும், மகாணஅரசுக்கும் நிரந்தர கட்டிடம் ஒன்றை, துறைமுகம் அமைந்திருக்கும் பகுதியில் சீனன் குடா கடல் பிரதேசத்தில் உள்ள சிறு தீவு ஒன்றின் மீது அழகிய நீருற்றுக்களுடன் உருவாக்குவதற்கு, திட்டவரைபுகள் தயாரிக்கப்பட்டு, கட்டுமான படங்களும் தயாரிக்கப்படடு, நிதியும் ஒதுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும், தரைவழியாக இணைப்பதற்காக, பிரிட்டிஷ் காலப்பகுதியில் பயன்படுத்தி, பின்னர் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கிழக்கு கடற்கரைச் சாலையை இந்திய அரசின் உதவியுடன் திருத்தி அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. திருகோணமலையை அரசியல் தலைநகரமாகவும், வவுனியாவை வர்தக நகரமாகவும் உருவாக்குவதற்கான திட்டங்கள் வரையப்பட்டது. திருகோணமலையில் இந்திய அரசின் துணையுடன் அனல் மின்நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கான திட்டமும் உருவாக்கப்பட்டது. மாகாண அரசின் உறுதியான, மும்முரமான நிர்வாகச் செயற்பாடுகள் திருகோணமலையில் குடியேறியிருந்த சிங்கள மக்களை அச்சம் கொள்ளச் செய்தது. முழுக்க முழுக்க தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் நகராக திருகோணமலை மாறி வரும்நிலையில் தமது பாதுகாப்பு உகந்த சூழ்நிலை இல்லை என அஞ்சி அனைத்து சிங்கள மக்களும் தாமாகவே திருகோணமலை நகரை விட்டு வெளியேறினர். சிங்கள மக்களுக்கு எதிரான எந்தத் தாக்குதல்களும் நடைபெறாமலேயே திருகோணமலை முழுத்தமிழர்களின் நகரமாக பரிணமித்துக் கொண்டிருந்தது.
அரச நிர்வாகத்தை உறுதியுடன் செயற்படுத்துவதற்காக வடகிழக்கில் உள்ள ஒவ்வோர் மாவட்டத்துக்கும், மாவட்ட நிர்வாகத் தலைவராக அரசியல் இணைப்பாளர்களை மாகாணஅரசு நியமித்தது. இதன் அடிப்டையில் அரசாங்க அதிபர், மாவட்ட அரசியல் இணைப்பாளரின் பணிப்புரையின் பேரில் செயலாற்ற கூடிய நிர்வாக ஒழுங்கமைப்பு உருவாக்கபட்டது. இதன் காரணத்தால் விடுதலைப்புலிகளின் கொலை மிரட்டலுக்குப் பயந்து, பணிக்கு வராமல்;, சம்பளம் பெறுவதற்கு மட்டும் வந்து கொண்டிருந்த அரச அதிகாரிகள் பணிக்கு நாளாந்தம் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருகோணமலையில் வடகிழக்கு மாகாண அரசின் பணிகளுக்கும், மாவட்டங்களில் உள்ள அரச பணிகளுக்கும், ஆசிரியர் பணிகளுக்கும் என ஏராளமான வேலை வாய்புகள் உருவாக்கப்பட்டன. தமிழ்மக்கள் தமக்கு என ஒரு அரசு உருவாக்கபட்டு விட்டதை, அதன் உறுதியான செயற்பாடுகள் மூலம் மெது மெதுவாக உணரத்தலைப்பட்டனர். இவை அனைத்தும் மாகாணஅரசு உருவாக்கப்பட்டு ஆறுமாதகாலத்திலேயே உருவாக்கப்பட்டது. இவற்றுக்கான மகாணஅரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் இரவு பகலாக ஊன் உறக்கம் இன்றி செயற்பட்டனர். வடகிழக்கு மாகாண அரசின் செயற்பாட்டினால், தென்னிலங்கையில் உள்ள மகாணசபைகளின் முதமைச்சர்கள் கவரப்பட்டு வடகிழக்கு மாகாண நிர்வாகத்தினை பார்து தாமும் தம்முடைய மாகாண நிர்வாகத்தை அமைத்து கொள்ள திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டனா. இதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய வரதராஐப்பெருமாள் மகாண முமைச்சர்களின் மாநாட்டை நடாத்தி 13வது திருத்தச் சட்டத்தின் மூலமான அதிகாரப் பரவலாக்கலை அனைத்து மாகாணங்களுக்கும் வழங்குவதற்கு, சிங்கள முதலமைச்சர்களின் துணையுடன் செயற்படுவதற்கான செயற்திட்டங்களை வகுக்கத் தொடங்கியது. மாகாண அரசின் செயற்திறனினால் கவரப்பட்ட வெளிநாட்டு தூதுவர்களும், சர்வதேச நிதிநிறுவனங்களும், வடகிழக்கின் மறுநிர்மானக் கட்டுமானங்களுக்கான பேச்சுவார்தைகளை நடாத்துவதற்கு திகோணமலைக்கு வரத் தொடங்கினர்.
ஈப்பிஆர்எல்எப் அமைப்பின் சர்வதேச முற்போக்கு நட்புசக்தியகள் வடகிழக்கு மாகாணஅரசுடனும் ஈப்பிஆர்எல்எப் உடனும் ராஐதந்திர உறவுகளை வலுப்படு;த்த ஆரம்பித்தன. குறிப்பாக 1979 ம் ஆண்டு நிக்கரகுவாவில் புரடசி மூலம் ஆட்சிக்கு வந்த சான்டினிஸ்டா அரசுஇ தமக்கு தொழில்சார் வல்லுனர்களை வழங்குமாறும், அதற்கு பதிலீடாக சர்வதேச மட்டத்தில் நிக்கரகுவா அரசு தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐநா உட்பட அனைத்து சர்வதேச அரங்குகளிலும் முன்னெடுப்பதாக உறுதியளித்திருந்தது. அதன் அடிப்படையில், உடன்படிக்கு ஒன்றை கைச்சாத்திடுவதற்கும்;; 1989 ஆண்டு யூலை மாதம் நிக்கரகுவாவில், சான்டினிஸ்டா அரசின் 10வது ஆண்டு தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கான அழைப்பை ஈபிஆர்எல்எப் அமைப்புக்கு விடுத்திருந்தது.
இவ்வாறு இந்திய அரசின் துணையுடன் தமிழ்மக்களுக்கு என கருக்கொண்டிருந்த தமிழர் அரசு படிப்படியாக பலம்பெறத் தொடங்கியது. இதனால் மக்கள் மாகாண அரசினை நோக்கி அணிதிரளத் தொடங்கினர். இதனால் மகாண அரசு தொடர்பான விடுதலைப்புலிகளின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடாமல் போக, விடுதலைப்புலிகள் மாகாணஅரசின் செயற்பாட்டினால் அரசியல் ரீதியிலும், இந்திய அமைதிப்படையின் செயற்பாட்டினால் இராணுவரீதியிலும் தனிமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்தருணத்தில் தான் விடுதலைப்புலிகளுக்கும் பிரேமதாசா அரசுக்குமான ஊடாடல்கள் ஆரம்பமாகத் தொடங்கியது.

தொடரும்.........

Sunday, August 6, 2017

தோழர்களே நண்பர்களே....தோழர் வளவன் எழுதும் ... 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் உட்புறம்
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருட நிறைவுதினம்....(பாகம் 7)
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 13 பேர், பலர் அமர்ந்துள்ளனர்
திருகோணமலையில் முதல் தமிழர் அரசு
1988ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற வடகிழக்குமாகாணசபைத் தேர்தல், தமிழ்மக்கள் மத்தியில் ஆளுமைமிக்க ஆயுத இயக்கமாகிய தமிழீழ விடுதலைப்புலிகளால் பகீஸ்கரிக்கப்பட்டது. அப்படிப்பட்ட நிலையிலும் அதிகளவு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்குக் காரணம் அமைதி, ஜனநாயகம், ஐக்கியம் ஆகியவற்றின் மீது தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட தாகமாகும். 1983ம் அண்டு இனக்கலவரத்துடன் ஆரம்பித்த யுத்தசூழலும், சகோதரப்படுகொலைகளும் பின்னர் இந்திய அமைதிப்படையுடனான விடுதலைப்புலிகளின் யுத்தமும் தமிழ்மக்களை களைத்துப் போகச் செய்திருந்தது. தமிழ்மக்களின் நாடித்துடிப்பினை துல்லியமாக அறிந்து கொண்ட EPRLF தேர்தலை ஓர் சவாலாக எடுத்துச் செயற்பட்டமையால் மாகாண அரசினை பொறுப்பேற்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இதே EPRLF தான் பின்பு மக்கள் மத்தியில் பரவலாக தம்மை நிலைநிறுத்தி, பலப்படுத்திக் கொள்ளத் தவறியது என்பதை பின்னர் பார்க்கலாம். இவ்விடத்தில் ஒரு கவலக்குரிய நிகழ்சிப் போக்கை பதிவுசெ;யவதும் அவசியமாகின்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் களத்தில் EPRLF SLMC ஆகிய கடசிகள் நேர் எதிராக போட்டியிட்ட காரணத்தால், வடகிழக்கில் உள்ள இந்து அமைப்புக்கள் EPRLF ஆதரவாக அறிக்கைகற் விட்டு பிரச்சாரத்தில் இறங்க, கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் ஐமாத்துக்கள் SLMCஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கின. தேர்தல் முடியும் வரை முஸ்லிம் - தமிழ் இனப்பதட்டம் ஒன்று இருந்து கொண்டே இருந்தது. இதனை EPRLF விரும்பாவிடினும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் இப்பதட்டம் உச்சப்பட்ச வாக்களிப்பை தேர்தல் தினத்தன்று ஏற்படுத்தி கொடுத்தது என்பதும் உண்மையாகும்.

மாகாணசபைத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபையில் EPRLF – 41, ENDLF , – 12, SLMC – 17இ ருNP – 1 என்ற எண்ணிக்கையில் மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.EPRLF தலமையிலான தமிழர் அமைப்புக்ளும் வெற்றியீட்டியதை அடுத்து அடுத்து தமிழர்களுக்கான முதல் அரசு, தமிழ்மக்களின் நீண்ட நாள் கனவாகிய திருகோணமலையில் உருவாகியது. இந்திய அமைதிப்படை இலங்கையில் இ;ருந்த காரணத்தினாலேயே திருகோணமலையை வடகிழக்கின் தலைநகரமாக்க இலங்கை அரசு ஒப்புக்கொண்டது. வடகிழக்கு மாகாண அரசின் முதலமைச்சரை தெரிவு செய்வதற்காக EPRLF மத்திய கமிட்டி கூட்டப்பட்டது. EPRLF மத்திய கமிட்டிக் கூட்டத்தில் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்குமாறு அதன் செயளாளர் நாயகம் க.பத்மநாபா பல உறுப்பினர்களால் வேண்டப்பட்ட போதும், தமக்கு கட்சிப்பணிகள் இருப்பதாக கூறி, அப்பதவியை அவர் ஏற்கமறுத்துவிட்டார்.. க. பத்மநாபா அப்பதவியை ஏற்காதபட்சத்தில், அவருக்கு அடுத்தநிலையில் இருந்தவரும், தற்போதைய EPRLF தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரனே அப்பதவியை ஏற்றிருக்க வேண்டும். ஆனால் க.பத்மநாபா மூன்றாவது இடத்தில் இருந்த அ. வரதராஜப்பெருமாளையே தெரிவுசெய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தினை வெளிப்படுத்தினார். இந்த முடிவுக்கு இலங்கைக்கான இந்திய தூருவர் டி.என். டிக்சித்தும் காரணமாக இருந்தார் என நம்பப்படுகின்றது. ஏனெனில் இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவான காலத்தில் இருந்து அ.வரதராஜப்பெருமாள் டி.என். டிக்சித்துடன் ஒர் நெருக்கமான உறவினை உருவாக்கியிருந்தார். க. பத்மாநாபா அவர்களின் விருப்பத்தை மற்றை மத்தியகமிட்டி உறுப்பினர்கள் மறுபேச்சின்றி ஏற்றுக்கொண்டதை அடுத்து அ. வரதராஜப்பெருமாள் முதலமைச்சாராக 1988 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி பெரும்பான்மை வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டார். 1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்று ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ரணசிங்க பிரேமதாசா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதி பிரேமதாசா முன்னிலையில் அ. வரதராஜப்பெருமாள். வடகிழக்கு மாகாணசபையின் முதல் முதலமைச்சராக உத்தியோகபுர்வமாக பதவிப்பிரமானம் செய்து கொண்டார். இதனை அடுத்து மாகாண அரசுக்கான அமைச்சர்கள், மாகாண கவர்னர் நளின் செனிவரட்ணா முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டனர்.

மாகாண அமைச்சர்களை தெரிவுசெய்யும் முறையிலும் EPRLF மிக அவதானமாகவே நடந்து கொண்டது. வடகிழக்கை பிரதிநித்துவப்படுத்தக் கூடியவகையிலும், வடகிழக்கில் உள்ள அனைத்து இனமக்களை பிரதிநித்துவப்படுத்தக் கூடியவகையிலும் முதல் மாகாண அரசு உருவாக்கப்பட்டது. மாகாண அரசுக்கான ஐந்து அமைச்சர்களில், முதலமைச்சாராக அ.வரதராஜப்பெருமாளும் ( EPRLF ) நிதியமைச்சராக, கிழக்குமாகாணத்தை சேர்ந்த பெ. கிருபாகரன் அவர்களும் (EPRLF ), மறுவாழ்வு அமைச்சராக ராஜரட்ணம் (ENDLF), போக்குவரத்து அமைச்சராக அபு. யூசுப் (இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி), திட்டமிடல் அமைச்சராக தயான் ஜெயதிலக்க( இவர் சொந்த காரணங்களுக்காக சில மாதங்களில் பதவி விலக ஜோ செனிவரட்னா அமைச்சாராக்க பட்டார்) ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மாகாணசபையின் சபாநாயகராக ஈ.பி.ஆர்.எல்.எப் ஐச் சேர்ந்த பொன்.ராம் ராஜகாரியர் தெரிவு செய்யப்பட்டார். வடகிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சி தலைவராக முஸ்லிம் காங்கிரனை சேர்ந்த மறைந்த அஸ்ரப் தெரிவுசெய்யப்பட்டார்.

ஈ.பி.ஆர்.எல் தலைமையிலான வடகிழக்கு மாகாண அரசாங்கத்தின் முதல் கொள்கை பிரகடணம் பின்வருமாறு அமைந்தது. இந்திய இலங்கை ஒபந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13வது அரசியல் சாசனத் திருத்தம் தமிழ்மக்களின் அபிலாசைகளை முழுமையாக திருப்திபடுத்தாத போதிலும், மேலதிக அதிகாரங்களை பெறுவதற்கான மத்திய அரசாங்கத்துடனான பேச்சுவார்தைகளுக்கு இதை ஒர் நல்ல தொடக்கமாக கருதுகின்ற அதேவேளையில், இந்திய அரசும் எம்முடன் இணைந்து செயற்பட்டு, மேலதிக அதிகாரங்களை வடகிழக்கு மாகாணஅரசுக்கு பெற்றுக் கொடுக்கும் என அமைந்திருந்தது. எனவே இங்கு மாகாண அரசு பதவிக்கா இலங்கை அரசிடம் சோரம் போனதாகவோ, தமிழ்மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு துரோகம் செய்து விட்டதாகவோ கருதிவிடமுடியாது. தமிழ்மக்களுக்கு அமைதியையும், சமாதானத்தையும் இந்திய அரசின் உதவியுடன் உருவாக்கிக் கொடுக்கும் அதேவேளை, ஜனாநாயக முறைப்படி உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாகாண அரசு என்ற கருவியைப் பயன்படுத்திக் கொண்டு, இலங்கை அரசின் மீது இந்தியாவின் அழுத்தத்தை பிரயோகித்து மேலதிக அதிகாரங்களை தமிழ்மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு முயர்சித்தது.

இதன் அடிப்படையி; முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் கொழும்புக் பல தடவைகள் விஜயம் செய்து, ஜனாதிபதி பிரேமதாசாவையும், மத்திய அமைச்சர்களையும், மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து வடகிழக்கு மாகாண அரசுக்கு, 13வது திருத்தச் சட்டம் மூலம் பரவலாக்கப்பட வேண்டிய அதிகாரங்கள் பற்றி பேச்சுவார்தை நடாத்தினார். கொழும்பு அரசாங்கத்தை பொறுத்தவரையில் அதிகாரப் பரவலாக்கம் என்பது, சொத்துக்களையும், நபர்களையும் வடகிழக்கு மாகாணஅரசுக்கு கொடுப்பது என்ற வகையில், பெறுமதி மிக்க பஜரோ ஜீப்புக்களை வடகிழக்கு மாகாண அமைச்சர்களுக்கும், மகாணசபை உறுப்பினர்களுக்கும் கொடுத்து திருப்திப்படுத்திவிடலாம் என்றே நினைத்திருந்தது. ஆனால் தனது எண்ணம் தவறானது என்பதை பிரோமதாசா அரசு சொற்ப காலத்திலேயே புரிந்து கொண்டது.

பிரேமதாசா அரசு அதிகாரங்களை பரவலாக்க மறுத்தது. வடகிழக்கு மாகாண அரசு, பத்திரிகைகளில் கொடுக்கும் விளம்பரங்களில் 'மாகாண அரசு' என்ற பதத்தைப் பாவிக்கக் கூடாது என்றும், 'மாகாண சபை' என்ற பதத்தை பாவிக்குமாறு முதலமைச்சருக்கும், பத்திரிகைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ஆனால் மாகாண சபை என்பது பாராளுமன்றம் போன்ற சட்டவாக்க சபை என்றும் மாகாண அரசு என்பது முதலமைச்சர் தலைமயிலான நிர்வாக யத்திரம் என்பதும் வரதராஜபெருமாளின் வாதமாக இருந்தது. அது சரியான வாதமாகவே இந்திய அரசினாலும், வடகிழக்கு மாகாண அரசு அதிகாரிகளாலும் புரிந்து கொள்ளப்பட்டது. இதனால் இப்பிரச்சனையை ஈ.பி;.ஆர்.எல். எப் அரசு ஒரு பெரிய விடயமாக கருதாமல் தொடர்ந்து தம்மை வடகிழக்கு மாகாண அரசு எனறே அழைத்துக் கொண்டதுடன் செயற்பாடுகளும் அப்பேரின் அடிப்படையிலேயே அமைந்தது. ஆனால் வடகிழக்கு மாகாண அரசுக்கு அதிகாரங்கள் எதுவும் வரவில்லை பஜரோ ஜீப்புக்கள் மட்டுமே வந்தன. ஆனால் ஈ.பி.ஆர்.எல் அரசோ அதனால் திருப்திப்பட்டுவிடாமல் மேலதிக அதிகாரங்களை பெறுவதற்கான செயல் நடைமுறைகளில் இறங்கியது.

இதனால், ஈ.பி.ஆர்.எல். எப் அரசு, மாகாணசபை அதிகாரிகளுடன் இணைந்து, 13வது அரசியல் சாசன திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பான நிலைகான் அறிக்கை(Status report) உருவாக்கி இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் வழங்கியது. அத்துடன் ஈ.பி.ஆர்.எல்.எப் அரசினால் மேலும் இரு ஆவணங்கள் உருவாக்கப்பட்டன.

ஓன்று:- 13வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டத்தினை பிரதியீடு செய்யப் கூடிய அரசியல்சாசன திருத்தச் சட்டமூலத்துக்கான முன்மொழிவு.

இரண்டு:- மகாணசபை சட்டம் இல.42- 1987 னைப் பிரதியீடு செய்வதற்கான சட்ட முன்மொழிவு.

இவ்விரண்டும், மாகாணஅரசின் முதல் கொள்கை பிரகடனமான, மேலதிக அதிகாரங்களுக்கான பேச்சு வார்தையின் மூலம் 13வது அரசியல் சாசன திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரப்பரவலாக்கம் தொடர்பான பற்றாக்குறைகளை நீங்குவது என்பதன் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. இதன் தொடர்சியாக வடகிழக்கு மாகாணஅரசுக்கு அதிகாரங்களை பெற்று கொடுப்பதற்காக இந்திய அரசு தனது தூதுவர் டி.என். டிக்ஷி;த் மூலமாக பிரேமதாசா அரசின் மீது தொடர் அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தது. அதிகாரங்களை பரவலாக்க மறுக்கும் பிரேமதாசா அரசின் இறுக்கமான நிலையினால் விரக்தி அடைந்த இந்திய தூதுவர் டி.என்.தீக்ஷட், ஒரு கட்டத்தில், பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், இலங்கை அரசு தொடர்ந்தும் இதே நிலைப்பாட்டில் இருக்குமானல் துருக்கியில் இருந்து சைப்பிரஸ் பிரிந்தது (( It would lead to a Cyprus type division in Srilanka) போன்ற தீர்வு தவிர்க முடியாது போய்விடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

அதிகாரங்களை கூடுதலாகப் பெறுவதற்கும், வெற்றிடத்தில் இருந்து மாகாண அரசுக்கான நிர்வாக கட்டமைப்புக்களை உருவாக்கி, நாளாந்த அரச நிர்வாக நடவடிக்கைகளை சுமூகமாக நடைபெறச் செய்வதற்கும் மாகாணஅரசு முயர்சித்துக் கொண்டிருந்தது. இதே சமயம் மாகாண அரசின் செயற்பாடுகளை முடக்குவதற்கும், நீர்த்துப் போகச் செய்வதற்குமான வேலைகளை விடுதலைப்புலிகள் செய்து கொண்டிருந்தனர். EPRLF , ENDLF, TELO, PLOT உறுப்பினர்களை படு கொலை செய்வதிலும், வடகிழக்கில் உள்ள அரச அதிகாரிகளை பணிக்குச் செல்லக்கூடாது என மிரட்டுவதிலும், மாகாண அரசுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பை வழங்கி வந்த இந்திய அமைதிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதல்களை நடாத்துவதிலும் விடுதலைப்புலிகள் மும்முரமாக ஈடுபட்னர். விடுதலைப்புலிகளுக்கு சார்பான தமிழ் ஊடகங்கள் இந்திய அரசுக்கு எதிராகவும், மாகாண அரசுக்கு எதிராகவும் செய்திகளை வெளியிடுவதிலும், கட்டுரைகளை வரைவதிலும் தமது நேரத்தை செலவளித்து தமிழ்மக்களுக்கு அதிகாரம், அமைதி, சமாதானம் போன்றவை ஏற்பட்டுவிடக்கூடாது எனக் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டன. எனவே இவற்றை எல்லாம் எதிர்கொள்ள வேண்டிய சுமை மாகாணஅரசுக் ஏற்பட்டது.

1986ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலைப்புலிகள் அமைப்பினால் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு தடைசெய்யப்பட்டு பல உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, உறுப்பினர்கள் பலர் அமைப்பில் இருந்து விலகிய நிலையில், அமைப்பு ரீதியில் பலமற்றிருந்த ஈ.பி.ஆர்.எல் அமைப்பு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் புத்தூக்கம் பெற்று மகாண அரசினை பொறுப்பேற்றிருந்தாலும், மனிதவளப் பற்றாக்குறையுடன் தான் அவ் அமைப்பு செயற்படவேண்டியிருந்தது. அரசு அதிகாரிகளும், தமிழ் புத்திஜீவிகளும் மாகாணஅரசுடன் இணைந்து செயற்பட விருப்பமிருந்தாலும் விடுதலைப்புலிகளின் மிரட்டல்களுக்கு பயந்து, விலகியே நின்றனர். இன்றிலையில் வடகிழக்கு மாகாணஅரசு என்பது ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பைப் பொறுத்தவரையில் 'குருவி தலையில் சுமத்தப்பட்ட பனங்காய்' என்பது போலவே இருந்தது. இவ்வாறு பல்வோறு பிரச்னைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஈ.பி.ஆர்.எல்.அமைப்பு தினறியது என்று கூறினால் மிகையாகாது.

தொடரும் ...........

Friday, August 4, 2017

தோழர்களே நண்பர்களே....தோழர் வளவன் எழுதும் ... 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் உட்புறம்
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருட நிறைவுதினம்....(பாகம் 6)
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 13 பேர், பலர் அமர்ந்துள்ளனர்
காலம் காலமாக அதிகாரப் பசிக்குப் பழக்கப்பட்டுப்போன ஐக்கிய தேசியக் கட்சியை அதிகாரம் என்ற இரையை காட்டி வீழ்துவதற்கு முயர்சிகள் மேற்கொள்ப்பட்டன. அதற்கு நல்ல விளைவுகளும் கிடைக்கக் கூடிய அறிகுறிகள் தென்பட்டன.
வடகிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் மிரட்டல்களுக்கு அஞ்சி தேர்தல் அதிகாரிகளாக கடைமையாற்ற ஒருவரும் தயாரில்லை என்ற ஜே.ஆர் அரசின் வாதமாக இருந்தது. அப்படியாயின் தேர்தல் ஒன்று நடாத்தப்படாமல் “NO CONTEST PACT” ஒன்றை சம்மந்தப்பட்ட கட்சிகள் தமக்கிடையே உருவாக்கி, தேர்தல் நடாத்தப்படாமலேயே மாகாண அரசின் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற யோசனையை EPRLF அமைப்பினர் ஜே.ஆர். அரசுக்கு முன்மொழிந்தனர். இந்தியாவின் ராஜதந்திர அழுத்தத்துக்கு முகம்கொடுத்துக்கொண்ட அரசுக்கும், அதிகாரப்பசி மிக்க ஐக்கியதேசியக்கட்சிக்கும் இவ் யோசனை ஏற்புடையதாக இருந்தது.EPRLF இன் தூண்டிலில் வலுவாக சிக்கிகொண்ட ஐக்கிய தேசியக்கட்டி இரையை விழுங்க ஆரம்பித்தது. இவ் இரகசிய ஏற்பாடு தொடர்பாக EPRLF அமைப்பினருடன் பேசுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி அப்போதைய அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ணாவை நியமித்தது. EPRLF மத்தியகுழு அ. வரதராஜப்பெருமாளை நியமித்தது.
யுhழ்பல்கலைகழகத்தின் முன்னாள் பொருளாதர விரிவுரையாளரும், தமிழ்மாணவர் பேரவை, தமிழ்இளைஞர் பேரவை பின்னர் தமிழர்விடுதலைக்கூட்டணி என்ற அரசியல் பாசறையில் உருவாக்கி பின்னர், EPRLF இன் இடதுசாரி கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அதனுடன் இணைந்து மத்திய குழு உறுப்பினரான வரதராஜபெருமாள், அதிகாரத்தை மட்டுமே முதன்மைப்படுத்தும் முதலாளித்துவக் கட்சிகளுடனான பேரம் பேசுதலில் காய்களை நகர்த்துவதில் வல்லவர். அவர்கள் பாணியிலேயே பேசி, அவர்கள் நலனுக்காக செயற்படுவது போல் செயற்பட்டு தனக்கும், தான்சார்ந்த கட்சிக்கும் வெற்றியை பெற்றுக் கொடுக்ககூடியவர். இவரை தகுந்த நேரத்தில் அப் பொறுப்புக்கு நியமித்த EPRLF செயளாளர் நாயகம் க.பத்மநாபாவினதும் மத்திய கமிட்டயனதும் மதியூகம் பாராட்டத்தக்கதே.
பேச்சுவார்த்தையில் அ.வரதராஜப்பெருமாள் கொடுத்த கயிற்றினை, ரஞ்சன் விஜயரட்ணா நன்றாக விழுங்க ஆரம்பித்தார். 1988ம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்பகுதியில் இப்பேச்சு வார்தைகள் நடைபெற்றன. இப்பேச்சு வார்தை நடைபெற்றபோது. அப்போது வடக்கு மாகாணத்தில், யாழ்பாணம், வன்னித் தேர்தல் மாவட்டங்களில் உள்ள மொத்தம் 40 ஆசனங்களுக்குக்குEPRLF அமைப்பும், கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 32 ஆசனங்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு EPRLF மட்டும், திருகோணமலை மாவட்டத்துக்கு ஐக்கியதேசிய கட்சியும் மட்டும், அம்பாறை மாவட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ' மட்டும் ; வேட்புமனு தாக்கல் செய்வது என ஓர் இரகசிய உடன்பாடு காணப்பட்டது. அதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் EPRLF க்கு 11 ஆசனங்களும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்காங்கிரஸ்க்கு 14 ஆசனங்களும் , திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 10 ஆசனங்களும் கிடைப்பதற்கு ஏதுவாக உடன்பாடு காணப்பட்டது.
“NO CONTEST PACT” ன் பிரகாரம் வடகிழக்கு மாகாண அரசு உருவாக்கப்பட்டால் அதில் ஐக்கியதேசிய கட்சிக்கு வழங்கப்பட வேண்டிய அமைச்சுக்கள் பற்றி அமைச்சர் ரஞ்சன் விஜேயரட்ணா பிரஸ்தாபித்தார். அதற்கு வரதராஜபெருமாள் பதிலளிக்கையில், தமிழ்மக்களினதும் போராளிகளின் தியாகத்தினாலும் உருவான மாகாணஅரசில் அமைச்சு பதவி எதையும், ஐக்கிய தேசியக்கட்சி எதிர்பார்க்க கூடாது, உடன்பாட்டின் பிரகாரம் வேட்புமனுதாக்கல் செய்யப்பட்ட அடுத்த தினம் தேர்தல் ஆணையாளர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்களை அறிவிப்பார். அதற்கு அடுத்ததினம் வடகிழக்கு மாகாணசபை கூடும்போது நாம் ஆளும்கட்சியிலும் நீங்கள் எதிர்கட்சியிலும் இருப்பீர்கள் என ஆணித்தரமாக பதிலளித்தார். அதனை முழுமையாக நம்பிய ரஞ்சன் விஜயரட்ணவும், ஜே.ஆர் அரசும், வடகிழக்கு மாகாணசபை தேர்தலுக்கா வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் திகதியை அறிவித்து, அன்றைய தினம் வடகிழக்கின் அனைத்து அரசாங்க அதிபர் அலுவலகங்களுக்கும் வேட்புமனுவை போட்டியிடும் கட்சிகளிடம் இருந்து பெறுவதற்காக அரசஅதிகாரிகளை கொழும்பில் இருந்து விசேடமாக உலங்குவானூர்திகளில் ஜே.ஆர் அரசு அனுப்பியது.
ஐ.தே.கட்சியுடனான இரகசிய ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்குமாகாணத்தில் EPRLF, ENDLF ஆகிய அமைப்புக்கள் மட்டும் தமது வேட்பாளர் பட்டியலைத் தாக்கல் செய்வது என்றும் கிழக்கு மாகாணத்தில்; EPRLF ஐ.தே. கட்சியும் முஸ்லிம் காங்கிரசினர் மட்டும் வேட்பாளர் பட்டியலைத் தாக்கல் செய்வது என்றும் இரகசிய உடன்பாடு காணப்பட்டிருந்தது. ஆனால் நியமனப்பத்திரம் தாக்கல் n;சய்வதற்கான இறுதிநேரத்தில் ; EPRLF ஆலோசனையின் பிரகாரம் நுPசுடுகுஇ EPRLF, ENDLF, TELO ஆகிய உறுப்பினர்களின் பெயர்களை கொண்ட வேட்பாளர் பட்டியலை இவ் அமைப்புக்கள் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ; தாக்கல் செய்தன. வுரதராஜப்பெருமாள் முஸலிம் காங்கிரஸ் கட்சிக்கும் இரகசியமாக தாம் கிழக்கு மகாணத்தில் எல்லா தேர்தல் மாவட்டங்களிலும் வேட்புமனுக்களை தாம் தாக்கல் செய்யப்போதாகவும் அவர் களையும் எல்லா தேர்தல் மாவட்டங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டார் ;. EPRLF, SLMC. தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செதமை இறுதிநேரத்தில் அறிந்த ஐ.தே. கட்சி, வேட்பாளர் பற்றாக்குறையால் திருகோணமலை மாவட்டத்திற்கு தனது வேட்பாளர் பட்டியலை சமர்பிப்பமுடியாத இக்கட்டான நிலையும் ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே செய்த இரகசிய ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் 40 ஆசனங்களுக்கும் EPRLF, ENDLF, TELO கூட்டமைப்பு போட்டியின்றி தெரிவாக, கிழக்கு மாகாணத்தில் மாகாணசபை தேர்தலை நடாத்தவேண்டிய கட்டாய நிலைக்கு ஜே.ஆர் அரசு தள்ளப்பட்டது. இதன் பிரகாரம் 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி கிழக்குமாகாணத்தில் வடகிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் 83 சதவீதமான மக்கள் வாக்களித்தனர். இலங்கையின் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களித்த தேர்தலாகவும் இது சாதனை படைத்தது. ஒருபுறம் ஜனநாயக ரீதியாக தேர்தல் ஒன்றை நடாத்துவதை அரச அதிகாரிகளை மிரட்டுவதனூடாக விடுதலை புலிகள் தடுத்துக் கொண்டிருக்கு மறுபுறம் இலங்கை அரசு விடுதலை புலிகளை காரணம் காட்டி தேர்தலை நடாத்த முடியாது என இலங்கை அரசு கூற இருபகுதியினரையும் சமகாலத்தில் சமாளித்து கிழக்கு மாகாணத்திலேனும் தேர்தலை நடாத்த இலங்கை அரசை கட்டாயத்துக்குள்ளாக்கி வடகிழக்கு மாகாணசபைக்கு ஒர் ஜனநாயகத் தன்மையையும், Legitimacy ஐ குடுக்க கூடிய வகையில் மதியுகத்துடன் செயற்பட்டது.
வரலாற்றில் தமிழ் மக்களையும் அதன் தலைவர்களையும் உடன்படிக்கைகள் செய்து ஏமாற்றிவந்த சிங்கள அரசியல் கட்சி ஒன்று முதன் முதலாக தமிழ்மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்ட பாதையில், தமிழ் கட்சி ஒன்றினால் ; குறிப்பாக அ. வரதராஜபெருமாளின் ராஜதந்திரத்துக்கு பலியாகியாகிய நிகழ்சி இதுவாகும். இது வரை காலமும் இவ் உண்மைகளை தமிழ் மக்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஏனெனில் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் உண்மைகளை மக்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்ற நிலைப்பாட்டுடன் ஒரு பக்கச் சார்பாகவே செயற்பட்டு வந்தன, இன்றும் அப்படியே செயற்படுகின்றன.

தொடரும்.........

தோழர்களே நண்பர்களே....தோழர் வளவன் எழுதும் ... 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் உட்புறம்
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருட நிறைவுதினம்....(பாகம் 5)
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 13 பேர், பலர் அமர்ந்துள்ளனர்

இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தம் காலகாலத்திற்குத் தொடர்வதையே ஜே. ஆர் விரும்பினர். இதற்கான காரணங்களில் கீழ்வரும் இரண்டும் மிக முக்கியமானதாகும்.
ஒன்று:- தொடர்சியான யுத்தத்தினால் பாதிக்கப்படும் தமிழ்மக்கள் இந்தியாவின் நிரந்தர எதிரியாக மாறிவிடுவார்கள் அது சிங்களவர்களுக்கும் தனக்கும் சாதகமான விடயங்கள்.
இரண்டு:- தொடர்சியான யுத்தத்தினால் ஏராளமான தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வார்கள். இவ் வகையான இடம்பெயர்வு பெருமளவு தமிழ்ச் சனத்தொகையை இலங்கையின் வடகிழக்குப் பிரதேசத்தில் குறைக்கும் என்பதால் பிற்காலத்தில் அதிகாரப்பரவலாக்கல் கோரிக்கை என்பது வலுவிழந்ததாக்கப்படலாம் என்பதாகும். அன்றில் இருந்து இன்று வரை சிங்கள பேரினவாத சக்திகள் அரசியல் தீர்வு என்பதற்குக் பதிலாக தொடர்சியான யுத்தத்தையே விரும்பியது மட்டும் அல்ல தொடந்தும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
இந்திய அமைதிப்படைகள் மீது விடுதலைப்புலிகள் யுத்தத்தினை தொடர்ந்ததை அடுத்து, இந்தியா- தான் இலங்கையில் மிகவும் பெரிதோர் நெருக்கடிக்குள் தான் சிக்கிக்; கொண்டதை உணர்ந்தது. விடுதலைப் புலிகளுடன் வடகிழக்கு மாகாணத்தில் இந்திய அமைதிப்படை சண்டையில் ஈடுபட்டாலும், இந்தியாவில் சென்னையில் இயங்கிவந்த விடுதலைப்புலி அலுவலகத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் தளபதிகளில் முக்கியமானவரான கிட்டு அவர்களுடன் இந்திய அரசு அதிகாரிகள் தொடர்சியான பேச்சுவார்தைகளில் ஈடுபட்டு வந்தனர். இப் பேச்சுவார்தையின் விளைவாக கிட்டுவின் தூதுவர் ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்திப்பதற்கு வன்னிக்காட்டுக்கு அனுப்பப்பட்டார். தகவல்கள் சரியாகப் பரிமாறிக் கொள்ளப்படாமையால் துர்ரதிஸ்ரவசமாக அத்தூதுவர் இந்திய அமைதிப்படையினராலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதிகளிலும் இந்திய அரசு புலிகளை வைத்தே பிரச்சனையைத் தீர்ப்பதற்கு விரும்பியது. அதனால் தான் சென்னையில் தளபதி கிட்டுவுடன் தொடர்சியான பேச்சுவார்தைகளில் ஈடுபட்டது. யுத்தம் நடைபெற்ற காலத்திலும் தனது பிராந்திய நலன்களை பாதுகாப்பதற்கு தகுந்த அமைப்பு விடுதலைப்புலிகள் தான் என இந்திய அரசு உறுதியாக நம்பியது. அதனால் தான் விடுதலைப் புலிகளுடன் இலங்கையில் மோதலில் இருந்தாலும் சென்னையில் தொடர்சியாக ஒரு வருட காலம் தளபதி கிட்டுவுடன் பேச்சுவார்தைகளை இந்தியா நடாத்தியது. முன்பெல்லாம் இந்தியாவின் விருபத்திற்கிணங்கச் செயற்பட்ட விடுதலைப்புலிகள் தற்N;பாது இந்தியாவின் விருப்பத்திற்கு இணங்கிச் செயற்படவில்லை. தமிழீழத்தின் மீது பிரபாகரனுக்கு உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை மட்டுமல்லாது இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் ஆதரவும் தான் விடுதலைப் புலிகளின் இம் உறுதியான செயற்பாடுகளுக்குக் காரணம் என கூறப்படுகின்றது.
விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிபடையினருக்கும் இடையிலான யுத்தம் தமிழ்மக்;களுக்கு சொல்லொனா துன்பங்களையும், இழப்புக்களையும் கொடுத்தவேளையில் ஜே.ஆர் அரசாங்கத்திற்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
இதனால் இந்திய- இலங்கை ஒப்பந்தம் திசை தடுமாறிச் சென்று கொண்டிருந்த நேரத்தில் தமிழ்மக்களுக்கான தமிழர்களின் ஆட்சியை வடக்குக்கிழக்கில் உருவாக்கவேண்டும், வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் என EPRLF அமைப்பின் தலைவர் க.பத்மநாபா இந்திய அரசாங்கத்திடம் பகீரங்கமாக கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். இது வரை காலமும் மாற்றாம் தாய் மனப்பான்மையுடன் EPRLFபோன்ற இயக்கங்களை நடாத்தி வந்த இந்திய அரசு புலிகளுடனான பேச்சுவார்தை முற்றாகத் தோல்வியடைந்த நிலையில், சர்வதேசரீதியில் தனக்கு ஏற்பட்டு அபகீர்தியை சரிசெய்து கொள்ள EPRLF அமைப்புடன் இணைந்து செயற்படத் தயாராக இருந்தது. டெல்லியிலும், தமிழகத்திலும் உள்ள அரசியல் வாதிகள், பிரமுகர்கள் மத்தியில் பத்மநாபாவுக்கும், இருந்து நல்லுறவுகள், EPRLF உடன் இணைந்து செயற்படும் முடிவை இந்தியா எடுப்பதற்கு மிகவும் உதவின. இங்கும் இந்தியா தனது பிராந்திய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே செயற்பட்டது என்பது மறைக்கப்படமுடியாத உண்மையாகும். ஆனால் யதார்த்த அரசியலில் இச் செயற்பாடு தவிர்கமுடியாத ஒன்றாகும்.
1986 நவம்பரில் விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டு ஓரளவு சிதைந்து போயிருந்து EPRLF அமைப்புக்கும் தன்னைப் புரனமைக்கவேண்டிய தேவையிருந்தது. இன்னெருபுறம் இலங்கை அரசு நடைமுறையில் தமிழர்களுக்கு எதையும் செய்யாது, ஒப்பந்தத்தை எப்படியும் குழப்பும் என்ற காரணத்தால் இலங்கை அரசின் சுயரூபத்தை அனுபவரீதியில் இந்தியாவுக்கு எடுத்துக்காட்டவேண்டிய கடமை தமிழ்மக்களுக்கும், அவர்களைப் பிரதிநித்துவப் படுத்தும் அரசியல் இயக்கங்களுக்கும் இருக்கின்றது என்பதை EPRLF அமைப்பு உறுதியாக நம்பியது. இதனால் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவது என்ற முடிவுக்கு EPRLF ன் மத்தியகுழுவும், அரசியல்பீடமும் அங்கீகாரமும் வழங்கியது.
அதேசமயம் இந்தியாவுக்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்றப்படுவதற்கும், தனது பிராந்திய நலன்களுக்காகச் n;சயற்படுவதற்கும் ஓர் அமைப்பு இலங்கையில் தேவையாக இருந்தது. இன்னிலையில் இந்தியாவும், EPRLF அமைப்பும் ஒருவருக்கொருவர் தேவையிருந்த காரணத்தால் கைகுலுக்கிக்கொண்டனர்.
EPRLF ன் அழுத்தத்தினால் இந்திய அரசு- வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துமாறு இலங்கை அரசரின் மீது ராஜதந்திரீதியில் அழுத்தங்களை பிரயோகிக்கத் n;தாடங்கியது. இலங்கை அரசோ தேர்தல்களை நடாத்துவதற்குத் தான் தயார் ஆனால் வடகிழக்கில் தேர்தல் அதிகாரிகளாக கடமையாற்றுவதற்கு எந்த அரசு அதிகாரியும் தயாரில்லை என்று கூறித் தேர்தல்களை நடாத்தாமல் விடுவதற்கு முயற்சித்தது. இத்தருணத்தில் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக்கட்சியினரை வழிக்கு கொண்டுவர EPRLF அமைப்பினர், ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராஜதந்திர நடவடிக்கை ஒன்றில் இறங்கினர்.
ஐ.தே.கட்சியை வென்ற தமிழ் கட்சியின் இராஜதந்திரம்
இந்திய- இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு ஒன்ரரை வருடங்கள் உருண்டோடிவிட்ட நிலையில், யாருக்காக அவ் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதோ அவர்களுக்கு அது பலனளிக்காமல், அதிகாரப்பரவலாக்கல் தேவைப்படாத சிங்கள மக்களுக்கே பலனளித்துக் கொண்டிருந்தது. ஒப்பந்தத்தின் பலனாக உருவாகிய முட்டைகள் எல்லாம் ஜே. ஆர். ஜெயவர்தனாவின் கூடைக்குள்ளேயே விழுந்து கொண்டிருந்தன.
வடகிழக்கு மாகாணத்துக்கான தேர்தல்களை நடாத்தவேண்டும் என்ற இந்திய அரசின் அழுத்தத்தினை, இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் உடனான யுத்தத்தையும், அவர்களின் மிரட்டலையும் காரணம் காட்டி நீர்த்துப் போகச் செய்து கொண்டிருந்தது. மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படாது, மாகாணஅரசு உருவாக்கப்படாது போகுமேயானால், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டமைக்கான அடிப்படை ராஜதந்திர உத்தியை தமிழ்மக்கள் பிரயோகிக்க முடியாது போகும் என்ற கவலை தமிழர்விடுதலைக்கூட்டணி உட்பட மற்றைய விடுதலை இயக்கங்களுக்கு ஏற்பட்டது. ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட மாகாணசபைக்கான அரைகுறை அதிகாரங்களை கூட இலங்கை அரசு கொடுக்காது என்பதை இந்திய அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நிரூபிப்பதற்கு மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படுவது தமிழ்மக்களை பொறுத்தவரையில் அவசியமாயிற்று.
ஜே. ஆர். ஜெயவர்தனா அரசோ வடகிழக்கில் தேர்தல்களை நடாத்துவதற்குத் தான் தயார் என்றும் ஆனால் விடுதலைப்புலிகளின் மிரட்டல்களுக்கு அஞ்சி வடகிழக்கில் தேர்தல் அதிகாரிகளாக கடமையாற்றுவதற்கு எந்த அரசு அதிகாரியும் தயாரில்லை என்று கூறித் தேர்தலை நடாத்தாமல் காரணம் கூறிக்கொண்டிருந்தது. ஜே. ஆர். அரசின் இக் கபடத்தனத்தை எதிர் கொண்டு முறியடிப்பதற்கு EPRLF அமைப்பு ராஜதந்திர வியூகங்களை வகுத்தது.

தொடரும்.........

தோழர்களே  நண்பர்களே.. தோழர் வளவன் 
எழுதும் ... 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் உட்புறம்
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருட நிறைவுதினம்....(பாகம் 4)
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 13 பேர், பலர் அமர்ந்துள்ளனர்ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு இந்திய அரசினால் எல்லோரும் வற்புறுத்தப்பட்டார்கள் என்பது உண்மை. இந்தியாவிடம் இதுவரை பெற்ற உதவிகள் காரணமாகவும், தமிழீழமக்களின் நண்பனாக தொடர்ந்து இந்தியா இருக்கவேண்டிதன் அவசியத்தை எல்லோரும் உணர்ந்தமையினாலேயே விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து விடுதலை இயங்கங்களும் இடைக்காலத் தீர்வாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன. இன்னிலையில், இந்தியாவின் ஆதரவு தொடர்ந்து தேவை என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்த விடுதலைப்புலிகள் பின்னர் இந்திய அமைதிப்படை இலங்கை வந்தபின்பு சில மாதங்களில் இந்திய அரசுடன் முரண்படுவதற்கான உத்வேகத்தை கொடுத்தது, இந்தியாவை விரும்பாத மேற்கத்தைய நாடுகளே என்பதற்கு இத் தொடர் சம்பவக் கோர்வைகள் சான்றாக அமைகின்றன. இந்தியாவுடன் முரண்படுவது என்ற விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் முடிவு ஒரு புறம் இருக்க மற்றைய விடுதலை இயக்கத் தலைவர்களின் இந்தியா தொடர்பான பார்வை எப்படியானது எனவும் பார்கவேண்ணடடியுள்ளது.

இந்தியா, தமிழீழத்தை ஒருபோதும் அங்கீகரிக்கப்போவது இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அதே நேரம் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு இருக்கும், செல்வாக்கு, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒர் வல்லரசாக அது உருவாகிவரும் நிலையில் இந்தியாவுடன் பகைத்துக்கொள்வது என்பது எப்போதும் இலங்கைத் தமிழர்களுக்கு உகந்தது அல்ல, அப்படியான நடவடிக்கை எக்காலத்திலும் இலங்கைத் தமிழர்களுக்கு சமாதானத்தைத் தேடித் தராது என மற்றைய இயக்கத் தலைவர்கள் உறுதியாக நம்பினார்கள். குறிப்பாக EPRLF எனப்படும் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்ணனியின் செயளாளர் நாயகம் பத்மநாபா இவ் ஒப்பந்தம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகளும் பத்தி;ரிகை பேட்டிகளும் பின்வருமாறு தெரிவித்தன.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஈழத்தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அதே நேரம் இது வரை காலமும் ஈழமக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்து வந்த இந்தியா, இவ் ஒப்பந்தத்தை ஏற்குமாறு கோரும்போது ஈழமக்களின் நீண்டகால நலன்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் கோரிக்கையை புறந்தள்ள முடியவில்லை. இலங்கை அரசு இவ் ஒப்பந்தத்தை நிறைவேற்றமாட்டாது என்பதை நாம் நன்கு அறிவோம். இலங்கையின் அரசியல் வரலாறு அப்படிப்பட்டதாகும். இலங்கை அரசின் நடவடிக்கைகளை இன்னுமோர் கோணத்தில் பாhத்;தால் இதுவரைகாலம் ஈழத்தமிழர்களின் நண்பனாக இருந்து வந்த இந்தியாவை, ஈழத்தமிழர்களினதும், விடுதலை இயக்கங்களினதும் நிரந்தர எதிரியாக்குவதற்கு இவ் ஒப்பந்தத்தை; ஜே. ஆர் ஜெயவர்தனே பயன்படுத்த முனைவதை உய்துணரமுடிகிறது. இந்;தியாவை ஈழத்தமிழர்களின் நிரந்தர எதிரியாக்கவே ஜே.ஆர் ஜெயவர்தனா விரும்புகின்றர். இவ் ஒப்பந்தத்தின் மூலம் தனது பிராந்தியப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதால் இந்தியாவும் இவ் ஒப்பந்தத்தை நிறைவேற்றவே விரும்புகின்றது. இவ் நிலையில் ஈழத்தமிழர்கள் முன்னால் இரண்டு வழிமுறைகள் உள்ளன.

ஓன்று ஜே.ஆரி;ன் சூழ்;சிக்குப் பலியாகி இந்தியாவுடன், பகைத்து, இந்தியாவின் நட்பினை இழந்து, ஈழத்தமிழர்களுக்கு ஒர் நிரந்தரமான அரசியல் தீர்;வினை பெறமுடியாத நிலையை உருவாக்குவது.
இரண்டு இந்தியாவின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் முழுமனத்துடன் ஈடுபட்டு, இலங்கை அரசு இதனை நிறைவேற்றாது என்பதை நடைமுறையில் நிருபித்துக் காட்டி தொடர்ந்தும் இந்தியாவை ஈழமக்களின் நண்பனாக வைத்திருப்பது.

இரண்டாவது வழிமுறையே ஈழத்தமிழ்மக்களுக்கு பயன் கொடுக்ககூடியதாக இருக்கும். தற்போதைய பூகோள அரசியல் சூழ்நிலையில் இந்தியா தனிநாட்டை அங்கீகரிக்காமல் போகலாம் ஆனால் இதே அரசியல் பூகோள நிலமை என்றும் இப்படியே இருக்கப்போவது இல்லை. காலங்கள் மாறும் போது இந்தியா ஈழத்தை அங்கீகரிக்கக்கூடிய நிலை உருவாகும். இவ் ஒப்பந்தத்தின் பெறுபேறான வடகிழக்கு மாகாண அரசாங்கம் என்ற அரைகுறை அரசியல் தீர்வைக் கூட இலங்கை அரசு நிறைவேற்றாது என்பதை இந்தியாவுக்கும், சர்வதேச உலகத்திற்கும் அம்பலப்படுத்தவேண்டிய கடமை ஈழத்தமிழர்களுக்கு உள்ளது. அதனை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முயர்சிப்பதன் மூலமே செய்யமுடியும் பத்மாநாபா தெரிவித்தார்.
இந்தியா தொடர்பான பத்மநாபாவின் அரசியல் தீர்கதரிசனம் மிகச் சரியானது என்பதையே தற்போதைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

2002ம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவின் உதவி ஈழத்தமிழர்களுக்கு அவசியமானது எனக் கருத்துத் தெரிவித்தமையும் சரி, அன்மையில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கடந்தகால கசப்பான சம்பவங்களை இந்தியா பெரிய மனதுடன் மறந்து, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தலையிட்டு ஓர் தீர்வினை பெற்றுத் தரவேண்டும் எனத் தெரிவித்தமையும் சரி, அன்று பத்மநாபா அவர்களது இந்தியா தொடர்பான பார்வை சரியானது என்பதையே எடுத்தியம்புகின்றது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் ஆதரித்த விடுதலைப்புலிகள், இந்திய அமைதிப்படை இலங்கை வந்தபின்னர், வழிமுறை ஒன்றைத் தேர்ந்தெடுக்க பத்மநாபா போன்றவர்கள் வழிமுறை இரண்டைத் தேர்ந்தேடுத்தனர்.
ஈழத்தமிழர்கள் விரும்பியோ விரும்பாமலோ, விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைகும் இடையிலான யுத்தம் எறத்தாள ஒரு வருட காலம் இலங்கையில் தொடர்ந்த நிலiயில் இவ் ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் வெற்றியளிக்க முடியாமைக்கு விடுதலைப் புலிகளின் உக்கிரமான எதிர்பு முக்கிய காரணமாக இருந்தது. அதே நேரம் தென்னிலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஜே.வி.பி யினரும், அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரேமாதாசா போன்றவர்களும் இவ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இலங்கை அரசியல் களத்தில் இவர்கள் எல்லோரும் நேரடியாகச் செயற்பட இவர்களின் பின்னணியில் மறைமுகமாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் உளவுத்துறையினரும், பிரச்சார சாதனங்களும் மிகவும் தீவிரமாகச் செயற்பட்டன. இவர்கள் எல்லோரும் உண்மையில் தங்களது தனித்துவமான சொந்த அரசியல் லாபங்களுக்காகவே செயல்பட்டார்கள். ஆனால், அதன் மறைமுக விளைவுகள் இலங்கையில் இந்தியாவின் ஆளுமையை இல்லாதொழிப்பது என்ற இலக்கு நோக்கியே இருந்தது.

இந்தியா எப்படி இலங்கைத் தமிழ் மக்களது பிரச்சனையைப் பாவித்து தனது பிராந்தியப் பாதுகாப்பு என்ற விடயத்தை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பியதோ, அதே தமிழர்பிரச்சனையைப் பாவித்தே இந்தியாவின் ஆளுமையை இலங்கையில் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவும் மேற்கத்தைய நாடுகளும் இலங்கையில் உள்ள தமது ஆதரவு சக்திகளினுடாக செயற்படுத்துவதற்கு முனைந்தனர்.
இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தம் பாரிய அழிவுகளை வடகிழக்கு மாகாணமக்களுக்கும் குறிப்பாக யாழ்பாணமக்களுக்கு ஏற்படுத்தியது. இதற்கு முன்னைய காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தினால் ஏற்பட்ட அழிவுகளை விட இந்திய இராணுவத்தினால் ஏற்பட்ட அழிவு அதிகம் எனக்கூறலாம். யாழ்பாண மக்கள் இந்திய அமைதிப்படை தங்களைத் தாக்கும் எனக் கனவிலும் நினைக்கவில்லை. இந்திய அமைதிப்படையால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு போன்றவற்றையும் இந்திய அமைதிப்படை தானே எங்களை ஒன்றும் செய்யாது என நினைத்து ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் எல்லாம் அமைதிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தாம் எதற்காக இலங்கைக்கு வந்தோம், யாருடன் போராடுகின்றோம், தமது நண்பர்கள் யார்? ஏதிரிகள் யார்? என்பதில் இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு பெரும் குழப்பமும் ஏற்பட்டது.
விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையே ஆரம்பமான யுத்தம் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவுக்கும் சிங்கள இனவாதசக்திகளுக்கும் பெரும் சந்தோசத்தை அளித்தது என்று கூறினால் மிகையாகாது. இலங்கை இராணுவம் செய்யவேண்டியதை இந்திய அமைதிப்படை செய்து கொண்டிருப்பதாக கருதி அவர்கள் பெரும் சந்தோசத்;தில் இருந்தனர். மோதல் ஏற்பட்டு 1மாத காலத்துக்குள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து நகரப்பகுதிகளும் இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தததையடுத்து விடுதலைப்புலிகள் வன்னிப்பிரதேசத்தினுள் உள்ள காட்டுப்பகுதிகளுக்குள் முடக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் தொடர்சியான கெரில்லாத் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு ஏற்பட்டது. விடுதலைப்புலிகளின் வீராவேசம் மிக்க தாக்குதல்களால் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய அமைதிப்படையினர் பெரும் சிரமப்பட வேண்டியிருந்தது. சிவில் நிர்வாக உத்தியோகத்தர்கள் விடுதலைப்புலிகளால் மிரட்டப்பட்டனர். அதனையும் மீறி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய அமைதிப்படைக்கு உதவியவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் விடுதலைப்புலிகளின் அஞ்சுறுத்தல்களுக்குப் பயந்து அரசாங்க உத்தியோகத்தர்கள் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்ல மறுத்த நிலiயே வடகிழக்கு மாகாணம் எங்கும் காணக்கூடியதாக இருந்தது.

விடுதலைப்புலிகள் யுத்தத்தைக் காரணம் காட்டி ஜே.ஆர் ஜெயவர்தனாவும் இடைக்கால அரசாங்கத்திற்கான ஏற்பாட்டுகளைத் தவிர்த்து விட்டதுடன் ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக வேண்டிய வடகிழக்கு மாகாணசபையை உருவாக்குவதற்கான எந்த முயர்சிகளையும் எடுக்கவில்லை. ஜே. ஆர் யை பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று உருவாகுவதை விரும்பவில்லை. யுத்தம் ஜே. ஆரின் விருப்பத்தையே நிறைவேற்றிக கொண்டிருந்தது.
இதே சமயம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையின் வடகிழக்கு மாகாணம் தவிர்ந்த மற்றை 7மாகாணங்களுக்கும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான சுதந்திரக்கட்யினர் அத்தேர்தல்களைப் பகிஸ்கரித்தனர். அனைத்து மாகாணசபைகளையும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கைப்பற்றிக் கொண்டனர். எந்தத் தமிழ் மக்களுக்காக இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதோ அவர்களுடைய பிரதேசத்தில் தேர்தல் நடைபெறாமல் அதிகாரப்பரவலாக்கம் தேவையற்ற சிங்களவர்களின் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்று மாகாண அரசாங்கங்;கள் உருவாக்கப்பட்டன.
எந்தத் தமிழ்மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் அவர்களுக்குப் பயன்படாமல் இருக்க, யுத்தத்தைக் காரணம் காட்டி வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல்களை இலங்கை அரசு பிற்போட்டு வந்தது. விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முழுமையாகக் களையப்பட்டதன் பின்னரே வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படும் என ஜே.ஆர் ஜெயவர்தனா முழக்கமிட்டார். விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுதங்களை முழுமையாக களைவது என்பது இயலாத காரியம் என்பது ஜே. ஆர் ஜெயவர்தனாவுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் இவ் யுத்தம் காலகாலத்திற்குத் தொடர்வதையே ஜே. ஆர் விரும்பினர். இதற்கான காரணம் என்ன? .
தோழர்களே நண்பர்களே....தோழர் வளவன் எழுதும் ... 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் உட்புறம்
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருட நிறைவுதினம்....(பாகம் 3)
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 13 பேர், பலர் அமர்ந்துள்ளனர்
இந்தியா விடுதலைப் புலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மற்றைய விடுதலை இயக்கங்களைச் விடுதலைப்புலிகளுடன் சரிசமமாக நடாத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள் சிலரது கருத்து முக்கியமானதாகும். அதில், இந்திய தனது பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த முயல்வது என்ற விடயத்தில் இராணுவ அடிப்படையில் இந்தியா அறிவுறித்தியபடியெல்லாம் புலிகள் நடந்து கொண்டனர் என்பது தான். இராணுவரீதியில் இலங்கை மீது அழுத்தத்தை கொடுப்பதற்காக இராணுவ இலக்குகள் மீது மட்டுமல்லாது சிங்கள மக்கள் இலக்குகள் மீதான தாக்குதல்களை நடாத்தும் படியும் இந்தியா வலியுறுத்தியது. இதன் அடிப்படையிலேயே அனுராதபுரத்தில் சிங்கள கிராம மக்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடாத்தி பல சிங்கள மக்களை படுகொலை செய்தனர். இந்தியா அறிவுறுத்தியபடி எல்லாம் விடுதலைபுலிகள் தாக்குதல்களை மேற்கொண்டு இலங்கை அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தனர். இந்தியாவின் பிராந்தியப்பாதுகாப்பு என்ற விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு திறமை வாய்ந்த இராணுவ சக்தியாகவும், தாம் சொல்வதை உடன் நிறைவேற்றும் அமைப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்த காரணத்தாலேயே இந்திய அரசு இடைக்கால நிர்வாகத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட்டது என்பது அவ் ஆய்வாளர்களின் கருத்தாகும். மறுபுறம் EPRLF, PLOT, EROS போன்ற விடுதலை இயக்கங்கள் இடதுசாரி சிந்தனைகளை பெருமளவில் கொண்டிருந்த காரணத்தால் இராணுவத் தாக்குதல்களை விட மக்கள் போராட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டமையாலும் இந்தியாவின் கட்டளைகளுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் கீழ்படிந்து செயற்படவில்லை. ஆனால் இந்திய- இலங்கை ஒப்பந்தம் வரை இந்தியாவுக்கு ஆதரவாக இருந்து வந்த விடுதலைப்புலிகள் இந்தியாவுக்கு எதிராக மாறுவார்கள் என்பதை இந்தியா அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு விரும்பிய அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் தான் புலிகளுக்கு இந்தியாவை எதிர்ப்பதற்கான தைரியத்தை வழங்கினார்கள் என்பதும் அவ் ஆய்வாளர்களின் கருத்தாகும். இது உண்மை என்பதற்கு பி.பி.சி யின் கடந்த கால தற்கால நடவடிக்கைகள் சான்றாகும். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்திலும், பின்னர் இந்திய அமைதிப்படையுடன் விடுதலைப்புலிகள் யுத்தம் புரியும் காலகட்டத்திலும், பி.பி.சியின் செய்திகளும், பேட்டிகளும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானதாகவும், இந்தியாவுக்கு எதிரானதாகவுமே இருந்து வந்திருக்கின்றது. ஆனால் தற்போது செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்பு, இலங்கைப் பிரச்சனையில் மேற்குலகநாடுகளும் அமெரிக்காவும் முக்கிய பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்த பின்னர் பி.பி.சியின் அணுகுமுறை விடுதலைப்புலிகளின் தவறுகளை அம்பலப்படுத்துவதிலும், மக்கள் மத்தியில் இருந்து அவர்களை அன்னியப்படுதும் வகையிலுமே அமைந்திருக்கின்றது. இலங்கைப்பிரச்சனை தொடர்பாக காலத்துக்கு காலம் மாற்றமடையும் மேற்குலக நாடுகளின் கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையிலேயே பி.பி.சியின் செயற்பாடும் அமைந்திருக்கின்றது.
இந்தியஅமைதிப்படை இலங்கை வந்தபின்பும் இந்திய அரசின் ஆதரவுடன் செயற்பட்டு வந்த விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அரசுக்குமான முதல் விரிசல் இடைக்கால நிர்வாகம் தொடர்பான பிரச்சனையில் தான் உருவாகியது. இதுவும் மேற்கத்தைய நாடுகளின் ஆசீர்வாதத்துடன்தான் உருவாக்கப்பட்டது என்பது அரசியல் ஆய்வாளர்கள் பலரின் கருத்தாக இருக்கின்றது.
இடைக்கால முதலமைச்சர் பதவிக்காக விடுதலைப்புலிகள் சமர்பித்த மூன்று பேர் கொண்ட பட்டியலில் இருந்து யாழ். மாநகரசபை முன்னாள் ஆணையாளர் சிவஞானத்தை வடகிழக்கு மாகாண இடைக்கால முதலமைச்சராக, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா தெரிவு செய்தார். ஆனால் விடுதலைப்புலிகள் இடைக்கால முதலமைச்சாராக சிவஞானத்திற்குப் பதிலாக, கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த பத்மநாதனை தெரிவு செய்யும்படி வலியுறித்தினர். ஆனால் அதற்கு அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனே சம்மதிக்கவிலை. விடுதலைபுலிகள் வழங்கிய பெயர் பட்டியலில் இருந்துதான் சிவஞானத்தின் பெயரை நான் தேர்வு செய்தேன் நானாக ஒருவரையும் புதிதாகச் சேர்க்கவில்லை என்பது ஜே.ஆர்ன் வாதமாக இருந்தது. ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் வாதத்தை இந்தியாவினால் புறக்கணிக்கமுடியவில்லை. விடுதலைப்புலகளின் இவ் முரண்பாடான செயல் மேற்கத்தையநாடுகளின் உந்துதலாலேயே ஏற்பட்டது என கூறப்பட்டது.
இடைக்கால முதலமைச்சர் தொடர்பான இழுபறி நிலைமை தொடர்ந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் மட்டக்களப்பில் மக்களை அணிதிரட்டுவதில் இறங்கிய PLOT இயக்கத் தலைவர்கள் வாசுதேவா போன்றவர்களையும், EPRLF போராளிகள் பலரையும் விடுதலைப்புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் மூலம் படுகொலை செய்தனர். இச் சம்பவங்களினால், ஒப்பந்தத்தின் பிரகாரம் ஆயுதங்களை அனைத்தையும் போராளிகள் தம்மிடம் ஒப்படைத்து விட்டார்கள் என்ற இந்தியாவின் அறிவிப்பு கேள்விக்குறியாகியதை அடுத்து இலங்கை அரசு விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் முழுமையாகக் களையும்படி இந்திய அமைதிப்படைக்கும், இந்திய அரசுக்கும் நெருக்குதல்களைக் கொடுக்கத் தொடங்கியது.
இடைக்கால நிர்வாகத்தின் முதலமைச்சர் யார் என்ற விவகாரமும், விடுதலைப்புலிகளிடம் இருக்கும் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்ற விவகாரமும் இந்திய அரசை சிக்கலுக்குள் கொண்டு சென்றது. அனைத்துப் போராளிகளும் தமது முழு ஆயுதங்களையும் ஒப்படைத்து விடடார்கள் என இந்தியா அறிவித்த நிலையி;ல், தற்போது விடுதலைபை;புலிகள் மற்றைய இயக்க உறுப்பினர்களை கொல்ல ஆயுதங்களை பயன்படுத்துவது பகீரங்கப்படுத்தப்பட்டமை இந்தியாவை ஒர் இக்கட்டான நிலைமைக்கு இட்டுச் சென்றது.
இடைக்கால முதலமைச்சரை மாற்றி அமைக்கவேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக வைத்து உண்ணாவிரதம் இருந்த விடுதலைப் புலி இயக்க உறுப்பினர் திலீபன் அக்கோரிக்கை நிறைவேறாமலே உயிர்துறந்து தியாகியானார். சம காலத்தில் பாக்குநீரிணையில் ஆயுதக் கடத்தல் செய்ததாக இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலித் தலைவர்களான குமரப்பா, புலேந்திரன் போன்றோரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கு அன்றை தேசியபாதுகாப்பு அமைச்சர் லலித்அத்துலத் முதலி தீவிர முயர்சிகள் செய்தார். கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுபினர்களை விடுதலை செய்வதற்காக இந்திய அரசு ராஜதந்திரரீதியில் கடும்முயர்சிகளை மேற்கொண்டது. இந்தியாவின் முயர்சிகளை மீறி இலங்கை செயற்படுமாயின் இ;ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கும் தயாரான நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் வைக்கப்பட்டிருந்த, பலாலி இரணுவ முகாமை சுற்றி இந்திய அமைதிப்படை வீரர்கள் சுற்றிவளைத்து நின்றனர். ஆனால் இது தொடர்பாக பேச்சுவார்;தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கைது செய்யப்பட்ட விடுதலை புலி உறுப்பினர்கள் மர்மமான முறையில் சயனைட் அருந்தித் தற்கொலை செய்து கொண்டனர். கைது செய்யப்பட்ட நிலையில் இருந்து அவர்களுக்கு எப்படிச் சயனைட் வில்லைகள் கிடைத்தன என்பது பலருக்கும் புரியா புதிராகவே அன்று இருந்தது. ஆனால் அண்மையில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஆனந்தவிகடன் இதழுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் பிரபாகரனின் கட்டளைப்படி தானும், மாத்தையாவுமே, கைது செய்யப்பட்ட குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை பார்வையிட இராணுவமுகாமுக்கு சென்று அவர்களுக்கு சயனைட் மாத்திரைகளை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதில் இருந்து இந்தியஅமைதிப்படையுடனான யுத்தம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை விடுதலைப்புலிகள் விரும்பி வலிந்து ஏற்படுத்தியதாகவே கருதவேண்டியுள்ளது.
இவ் விடுதலைப்புலி உறுப்பினர்களின் மரணத்தைத் தொடர்ந்து இந்திய அமைதிப்படைக் எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உக்கிரமான யுத்தத்தை ஆரம்பித்தனர். 1987 ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 10ம் திகதி இவ் யுத்தம் ஆரம்பமாகியது. இரண்டு மாதகால அமைதிக்குப் பின்னர் யாழ்பாணத்தில் மீண்டும் யுத்தம் வெடித்தது. 2வருட காலம் நடைபெற்ற இவ் யுத்தத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அப்பாவித் தமிழ்மக்கள் பலரும், போராளிகள் பலரும் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான பொதுமக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் வல்லரசாக விளங்கும் இந்தியாவுடன் இராணுவரீதியில் சமர்புரிவது என்பது பாரிய மக்கள் இழப்புக்களை ஏற்படுத்தும் என்பதும் இந்தியாவின் நட்பை இழந்து கொள்வது-இலங்கைத் தமிழ்மக்களுக்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அறியாததல்ல. இருந்தும் அப்படிப்பட்ட ஓர் முடிவை பிரபாகரன் ஏன் எடுத்தார் என்பது தொடர்பாக பல கருத்துக்கள் இருக்கின்து. அதில் முக்கியமானது தமிழீழம் என்பதில் பிரபாகரனுக்கு உள்ள உறுதியான நம்பிகை என்பதுடன், இந்தியா எப்போதும் தமிழீழத்தை அங்கீகரிக்கப்போவது இல்லை. தனது இலட்சியத்தை அடைவதில் எப்போதோ ஒருநாள் இந்தியாவுடன் தான் சமர்புரிந்தே ஆகவேண்டும் அதை இன்றே தான் நன்கறிந்த தனது மண்ணில் ஆரம்பிப்போம் என்ற பிரபாகரனின் முடிவாகும்.
மேலும் இந்தியாவின் நட்பை இழப்பதற்கு பதிலீடாக மேற்கத்தைய நாடுகளின் உதவி கிடைக்கும் என வழங்கப்பட்ட உத்தரவாதம் போன்றனவும் காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் சிலரின் கருத்தாக இருக்கின்றது. ஒப்பந்தம் கையெழுத்தான காலகட்டம் மற்றும் தொடர்சியாக நிகழ்ந்த சம்பவங்களை கோர்வையாக பார்க்;கும் போது அரசியல் ஆய்வாளர்களின் இக்கருத்து சரியானது என்ற எண்ணத்தையே கொடுக்கின்றது. ஏனெனில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை பற்றி விடுதலை இயக்கங்களுக்கு எடுத்தியம்புவதற்காக விடுதலை இயக்கத் தலைவர்கள் அனைவரையும் இந்திய அரசாங்கம் டில்லிக்கு அழைத்த போது, விடுதலைப்புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்களின் தலைவர்கள் தமிழகத்தில் இருந்தே டில்லி சென்றனர். ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்போது யாழ்பாணத்தில் இருந்தார். அவரை அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகொப்டர் யாழ்பாணத்துக்குச் சென்று சுதுமலை அம்மன் கோவிலில் இருந்து பிரபாகரனை டில்லிக்கு அழைத்துச் சென்றது. இந்தியாவின் உறவு தேவைற்றது என்றும், தான் அங்கு சென்றால் தன்னை இந்தியா மிரட்டும் என பிரபாகரன் நினைத்திருந்தால் தன்னால் இந்தியா வரமுடியாது, ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை யாழ்பாணத்திலேயே எனக்கு விளங்கப்படுத்துங்கள், அது எமது மக்களுக்கு ஏற்புடையதாயின் டில்லி வருகின்றேன் என பிரபாகரன் மறுத்திருக்கமுடியும். யாழ்பாணத்தில் இருந்து பிரபாகரன் அவ்வாறு செய்திருந்தால் இந்திய அரசாங்கத்தினால் எதுவும் செய்யமுடியாதும் போயிருக்கும். ஆனால் அவர் அப்போது அவ்வாறு செய்யவில்லை. இதில் இருந்து இந்தியாவின் நட்பை தொடர்ந்து பேணவேண்டும் என்ற நிலைப்பாட்டையே அப்N;பாது பிரபாகரன் கொண்டிருந்தார் என்பதை உய்துணரமுடிகின்றது.

தொடரும்.........